தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகன் இறந்த சோகத்தால் தாய், தந்தை தற்கொலை - மகன் இறந்த துக்கத்தில் தாய் தந்தை தற்கொலை

மகன் இறந்த துக்கத்தை தாங்காமல் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் இறந்த சோகத்தால் தாய், தந்தை தற்கொலை
மகன் இறந்த சோகத்தால் தாய், தந்தை தற்கொலை

By

Published : Jun 6, 2022, 8:28 PM IST

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் எஸ் பொன்னாபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி துறையில் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கோவிந்தராஜ் மனைவி தனலட்சுமி காதிகிராப்ட்டில் பணிபுரிந்து இருந்துள்ளார்.

இவர்களுக்கு ஒரே மகன் மணிகண்டன். பட்டதாரியான மணிகண்டன் வீட்டின் செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடம் முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து கோவிந்தராஜூம், அவரது மனைவி தனலட்சுமி இருவரும் மன உளைச்சலில் இருந்து உள்ளனர்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று இருவரும் வெளியே சென்றுள்ளனர். பின்னர் இருவரும் வீடு திரும்பாத நிலையில் அவர்களது, உறவினர் கதிர்வேல் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காணவில்லை என வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் தண்ணீர் தீர்த்தம் என்ற பகுதியில் கடலில் யாரோ இருவர் ஒன்றாக உடலில் துணியை கட்டிக்கொண்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச்சென்ற மரைன் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை செய்ததில், சட்டைப் பையிலிருந்த ஆதார் கார்டை எடுத்து பார்க்கும் பொழுது பொள்ளாச்சியைச் சேர்ந்த தம்பதியினர் என விசாரணையில் தெரியவந்தது. இத்துயர சம்பவம் எஸ். பொன்னாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மியில் 20 சவரன் நகையைப் பணயம் வைத்து விளையாடிய பெண் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details