கோவை ராமநாதபுரம் பகுதியைச்சேர்ந்த ரமேஷ், ஷாலினி தம்பதியினரின் 5 வயது மகள் இனியா. கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிப்பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வருகிறார். இவர் 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை பாடியுள்ளார்.
இதனை அவரது பெற்றோர்கள் ’இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-க்கு அனுப்பியுள்ளனர். இவரது அபார ஞாபகத் திறனை ’இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அங்கீகரித்துள்ளது. இச்சிறுமியின் சாதனை 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.