தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 23, 2019, 10:21 PM IST

ETV Bharat / state

தேர்தல் நேரத்தில் சேர்ந்திருப்பார்கள்:திமுக கூட்டணி பற்றி உடுமலை ராதாகிருஷ்ணன் கருத்து

கோவை: திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் ஒன்றுசேர்ந்து இருப்பார்கள் தேர்தல் முடிந்தவுடன் பிரிந்து சென்றுவிடுவார்கள் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

udumalai-radhakrishnan-talks-about-dmk-alliance

தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பராமரிக்கும் விதமாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி,குளங்கள் தூர்வாரப்பட்டுவருகின்றன. இதன் ஒரு அங்கமாக கோவை மாவட்டத்தில் நிகழாண்டில் 368 சிறு பாசன குளங்கள் தூர்வாரப்பட்டு கால்வாய் சீரமைக்கப்ட்டுவருகின்றன.

இந்நிலையில் பொள்ளாச்சியை அடுத்த சின்ன நெகமம்,பணிக்கம்பட்டி நெடும்பாறை ஆகிய இடங்களில் குடிமராமத்து பணியை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமன் தொடங்கி வைத்தார்.

இதே போல பொள்ளாச்சி அருகே ஏ.நாகூர் ஆவல்பட்டி ஆகிய பகுதியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

குடிமராமத்து பணிகள்

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது , "தமிழ்நாடு விவசாயிகளின் எண்ணங்களுக்கு ஏற்ப குடிமராமத்து பணியை சிறப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டை முன் உதாரணமாக கொண்டு தெலங்கானவில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடிமராமத்து பணிகளை செய்துவருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவில் உள்ளது " எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவன்,வைகோ பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பியபோது திமுக கூட்டணி தேர்தல் நேரத்தில் மட்டும்தான் ஒன்று சேர்வார்கள்,தேர்தல் முடிந்தவுடன் பிரிந்து செல்வார்கள் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details