தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்க தான்’ - குடிபோதையில் போலீஸை கலாய்த்த இளைஞர்! - கருமத்தம்பட்டி

வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்க தான்" என கூறி மது போதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இருவரை பிடித்த போலீசார், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் போலீஸை கலாய்த்த இருவர்
குடிபோதையில் போலீஸை கலாய்த்த இருவர்

By

Published : Jul 6, 2021, 9:19 AM IST

Updated : Jul 6, 2021, 1:47 PM IST

கோயம்புத்தூர்:கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், மணிகண்டன். இருவரும் நீண்ட நாள்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனைக் கண்ட காவல் துறையினர், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கு அமர வைத்துள்ளனர்.

காவல் நிலையத்திலும் ரகளையில் ஈடுபட்ட அவர்கள், அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து அவர்களை காவல் துறையினர், மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்களை எச்சரித்தபோது, நாங்கள் என்ன திருட்டில் ஈடுபட்டோமா? என எதிர் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காவலர்களுக்கு கலாய்:

பின்னர் "பப்ளிசிட்டிக்காக போலீஸ் இப்படி பண்ணுது" என காவல் துறையினரை கலாய்த்த இருவரும், ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

இதன் உச்சகட்டமாக குடிபோதையில் இருந்த இளைஞர், வீடியோ எடுக்கும் காவலரை பார்த்து "வீரப்பனுக்கு ஆயுதங்கள சப்ளை செய்ததே நாங்க தான் சார்” என கலாய்த்துள்ளார்.

குடிபோதையில் போலீஸை கலாய்த்த இளைஞர்

இதனையடுத்து, அவசர ஊரதியை வரவழைத்த காவல் துறையினர், போதையில் அலப்பறை செய்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: போதையில் காவல் நிலையத்தில் ரகளை: பேருந்து நடத்துநர் கைது!

Last Updated : Jul 6, 2021, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details