கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி சாலையிலுள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில், மகளிர் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் கலந்துகொண்டு, மகளிர் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கி, முதல் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பெண் காவலர்களுக்கும், இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் பெண்கள், குழந்தைகள் யாரேனும் புகார் அளித்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், புகாரின் மீது விசாரணை நடத்தவும் ஏதுவாக இருசக்கர வாகனங்கள் பேரூதவியாக இருக்குமென காவலர்கள் தெரிவித்தனர்.