தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேருக்கு நேர் லாரிகள் மோதிய கோர விபத்து - இருவர் படுகாயம் - விபத்து

கோவையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இருவர் படுகாயமடந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து-இருவர் படுகாயம்
இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து-இருவர் படுகாயம்

By

Published : Jul 7, 2022, 1:08 PM IST

கோயம்புத்தூர்: சுந்தராபுரம் குறிஞ்சி குளம் அருகே அதிகாலை உக்கடம் நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியும், சுந்தராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரிகளில் பயணம் செய்த ஓட்டுநர் மேகநாதன் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து-இருவர் படுகாயம்

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சாலையில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனத்துடன் சாலை அமைத்த விவகாரம் - உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

ABOUT THE AUTHOR

...view details