இரண்டு புலிகள் மரணம் - வனத்துறையினர் விசாரணை - ஆனைமலை புலிகள் காப்பகம்
![இரண்டு புலிகள் மரணம் - வனத்துறையினர் விசாரணை Aanaimalai tiger reserve](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6721772-373-6721772-1586414787108.jpg)
12:13 April 09
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வனச்சரக பகுதிகளில் இரண்டு புலிகள் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பத்துக்கு உள்பட்ட தம்மம்பதி அருகில் உள்ள புங்கன் ஓடை மற்றும் போத்தமடை வன பகுதிகளில் இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த கிடந்த புலிகளின் உடல்களை மீட்டனர். வனத்துறை உயர் அலுவலர்களின் உத்தரவின்படி இறந்த புலிகளுக்கு உடற்கூறு ஆய்வு நடைபெற்றுவருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 968 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய பகுதியாகும். இங்குள்ள ஆறு வனச்சரகத்தில் பொள்ளாச்சி, உலாந்தி மானாம்பள்ளி, அமராவதி, வால்பாறை, டாப்சிலிப் ஆகியவை உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, கரடி, புலி, சிறுத்தை, புள்ளிமான் என எண்ணற்ற விலங்குகள் வசிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய வனவிலங்கு சரணாலயங்களில் உஷார்!