கோவை: கடந்த 1997-ம் ஆண்டு, கோவை உக்கடம் பகுதியில் பணியில் இருந்த காவலர் செல்வராஜ் என்பவர், அல் உம்மா அமைப்பினரால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது.
கலவரத்தில் பல இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக, கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள கிளாசிக் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் உள்ள கார் பார்க்கிங் ஏரியாவில் வெடிகுண்டு வைத்தது தொடர்பாக, 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கின் 12 வது குற்றவாளி முஜீபுர் ரகுமான் என்பவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
இதே போல் கடந்த 1996-ம் ஆண்டு பூபாலன் என்ற மத்திய சிறை வார்டன் பெட்ரோல் குண்டு வீசியும், ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெய்லர் ராஜா என்பவர் தற்போது வரை தலைமறைவாக இருந்து வரும் நிலையில் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்– 3 ல், வரும் 23 ஆம் தேதிக்குள் தலைமறைவாக உள்ளவர்கள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும், தலைமறைவாக உள்ளவர்கள் குறித்த நோட்டீஸ், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஒட்டப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க:'லிவ் இன் ரிலேஷன்ஷிப்' : டெல்லியில் மட்டும் 560 வழக்குகள் பதிவு என அதிர்ச்சித் தகவல்...