தமிழ்நாட்டில் சிறார் ஆபாசப் படங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்பவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுதொடர்பாக, நாற்பதிற்கும் மேற்பட்ட ஐபி எண்கள் கோவை மாவட்ட போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முகநூலில் சிறார் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்ததாக பொள்ளாச்சியில் தங்கி பணியாற்றிவரும் அஸ்ஸாம் மாநில இளைஞர் ரெண்டா பசுமாடாரியும், கோவை தனியார் கல்லூரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற இளைஞரையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து, அவர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.