தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்புத்தூரில் மின்சாரம் பாயந்து இருவர் உயிரிழப்பு! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூர்: தடுப்பணையில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

மின்சாரம் பாயந்து இருவர் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு

By

Published : Apr 30, 2021, 7:51 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், வளந்தாயமரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராசு, மல்லிகா. இருவரும் இன்று (ஏப்.30) மதுக்கரை கண்ணம்மநாயக்கனூர் பகுதியில் தேங்காய் பறிக்கும் பணிக்கு வந்தனர். பின்னர், இருவரும் தோட்டத்தின் அருகேயுள்ள தடுப்பணையில் மீன் பிடிப்பதற்காகச் சென்றனர்.

முதலில் தடுப்பணையில் ராசு கால் வைத்தவுடன் திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த மல்லிகா, அவரை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இறங்கினார். அவரும் உடனே மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால், இவர்களுடன் வந்த சக பணியாளர்கள் தேடி வந்தனர்.

அப்போது தடுப்பணையில் ராசு, மல்லிகா மயங்கி கிடந்ததது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உயர் மின் அழுத்த கம்பி அறுந்து தடுப்பணையில் விழுந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் இருவரின் சடலங்களை மீட்டு, உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத் தகராறில் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் - சிகிச்சைப் பலனின்றி குழந்தைகள் பலி!

ABOUT THE AUTHOR

...view details