தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண்ட மேல இருக்க கொண்டையை மறந்திட்டீங்க மேடம்.. லேப்டாப் திருடி மாட்டிக்கொண்ட பெண் வீடியோ! - stealing

கோவையில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் இருவர் திட்டமிட்டு லேப்டாப் திருடி மாட்டிக் கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

theft
திருட்டு

By

Published : May 1, 2023, 12:50 PM IST

திட்டமிட்டு லேப்டாப் திருட்டு: கையும் களவுமாக சிக்கிய இருவர்!

கோயம்புத்தூர்: காந்திபுரம் பகுதியில் பல்வேறு செல்போன் விற்பனை கடைகள், கணினி விற்பனை கடைகள், பழுது சரிபார்க்கும் கடைகள் ஆகியவை உள்ளன. இங்கு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ற கணிணி விற்பனை கடையும் இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக விஷ்ணு என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி மாலை ஒரு இளைஞர் மற்றும் ஒரு இளம்பெண் இருவரும் கடைக்கு வந்து கணினிக்கு மவுஸ் வேண்டும் எனக் கூறியுள்ளனர். அப்போது விற்பனையாளர் அந்த இளைஞருக்கு மவுஸ் காண்பித்துக் கொண்டிருந்த போது, அந்த நேரத்தைப் பயன்படுத்தி உடன் வந்த இளம்பெண் மாடலுக்காக டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60,000 மதிப்புள்ள ஒரு மடிக்கணினியை எடுத்து அவரது பேக்கில் வைத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த விற்பனையாளர் டிஸ்ப்ளேவில் இருந்த மடிக்கணினி இல்லாததைக் கண்டு இளம்பெண்ணிடம் கேட்டுள்ளார். முதலில் அந்த இளம் பெண் தான் எடுக்கவில்லை என மறுத்துள்ளார். அதைத் தொடர்ந்து பேக்கை காண்பிக்கும்படி விற்பனையாளர் வலியுறுத்தியுள்ளார். பிறகு அந்த இளைஞர் இளம் பெண்ணிடம் இருந்து பேக்கை வாங்கி அதிலிருந்த மடிக்கணினியை எடுத்து விற்பனையாளரிடமே திரும்பக் கொடுத்துள்ளார்.

பின்னர் மவுஸும் வாங்காமல் கடையை விட்டு இருவரும் வெளியே சென்றுள்ளனர். தற்போது இந்த திருட்டு குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விற்பனையாளர் விஷ்ணு தான் சரியாக கவனிக்காமல் இருந்திருந்தால் மடிக்கணினி திருட்டுப் போயிருக்கும் எனவும், மேலும் தனது வேலையும் பறிபோய் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜக - இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இடையே மோதல்.. தாராபுரத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details