கோவையில் தொடர்ந்து கரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு துடியலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த, 31 காவலர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
துடியலூர் காவல் நிலையத்தில் மேலும் இரு காவலர்களுக்கு கரோனா!
கோவை: துடியலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த மேலும் இரு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சோதனையின் முடிவில் ஒரு பெண் காவலர் உள்பட ஐந்து காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஐந்து காவலர்களும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து துடியலூர் காவல் நிலையம் மூடப்பட்டு, அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் துடியலூர் காவல் நிலையம் தற்காலிகமாக அருகிலுள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொண்ட மேலும் இரண்டு காவலர்களுக்கு இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.