தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்ற இருவர் கைது; களத்தில் இறங்கிய பொதுமக்கள்! - Two held for selling Ganja in Coimbatore

கோயம்புத்தூர்: கஞ்சா விற்ற இரண்டு பேரை ஊர் பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இருவர்
இருவர்

By

Published : Jan 13, 2021, 4:49 AM IST

கோயும்புத்தூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னியாண்டவர் கோயில் பகுதியில் வெளியூரை சேர்ந்த சில இளைஞர்கள் சிலர் சந்தேகத்திற்க்கிடமான வகையில் பேசி கொண்டு இருந்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர். இதில் மேலும் சந்தேகமடைந்த ஊர் மக்கள் இளைஞர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளன. உடனே அந்த இளைஞர்கள் தப்பி ஓடிய நிலையில், இருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கியுள்ளனர்.

கஞ்சா விற்ற இருவர் கைது

இருவரையும் பிடித்த பொதுமக்கள் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்து கருமத்தம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் ஒருவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவபாலன் என்பதும் மற்றொருவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பதும் தெரியவந்தது.

கஞ்சா விற்ற இருவர் கைது

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சாவை விற்ப்பதற்கு பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு தப்பி ஓடிய மேலும் இருவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details