தேர்தல் பறக்கும் படையில் இடம்பெற்றிருந்த பிடிஓ, காவலர்கள் பணியிடை நீக்கம் - Covai Election
10:46 March 27
கோவை: தேர்தல் பறக்கும் படையில் இடம்பெற்றிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமாரவேல் ஆகியோரை பணியிடை நீக்கம்செய்து மாவட்டத் தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பறக்கும் படையில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் அத்தொகுதித் தேர்தல் செலவினப் பார்வையாளர் ராமகிருஷ்ணா கோடியா, கொடுத்த அறிக்கையைச் சரிபார்க்கவும் பறக்கும் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை இரண்டு மணி நேரமாகியும் செயல்படுத்தவில்லை. இதையடுத்து பொள்ளாச்சி வடக்கு வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் ஆகிய மூவரையும் பணியில் அலட்சியம் காட்டியதாக கோவை மாவட்டத் தேர்தல் அலுவலர் நாகராஜ் பணியிடை நீக்கம்செய்ய உத்தரவிட்டுள்ளார்.