தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்தர்களை அச்சுறுத்திய காட்டு யானைகள் - elephant in coimbatore temple

கோவை: தாய் யானை ஒன்று அதன் குட்டியுடன் கோயில் அடிவாரத்தில் நின்றுகொண்டிருந்ததால், அச்சமடைந்த பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கோயில் அடிவாரத்தில் காட்டு யானை
கோயில் அடிவாரத்தில் காட்டு யானை

By

Published : Nov 25, 2020, 8:08 AM IST

Updated : Nov 25, 2020, 8:35 AM IST

கோவை மாங்கரை பகுதி அனுவாவி சுப்ரமணியர் கோயிலின் அடிவாரத்தில் இன்று (நவம்பர் 25) அதிகாலை ஒரு தாய் யானை அதன் குட்டியுடன் வந்தது. அங்கேயே வெகு நேரம் நின்றுகொண்டிருந்த யானைகளை கண்டு அச்சமடைந்த பக்தர்கள் கோயிலுக்குள்ளே செல்லாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதே சமயம் அங்கு இரவு நேர பணியில் இருந்த வனத்துறையினர் யானையை காட்டிற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு இரண்டு யானைகளும் காட்டிற்குள் புகுந்தன. இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் படம் பிடித்தனர்.

பக்தர்களை அச்சுறுத்திய காட்டு யானைகள்

பக்தர்கள் அதிகமாக வரும் கோயில் பகுதிகளில் யானைகள் வருவதால் பக்தர்களுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் யானைகள் கோயில் பகுதிகளுக்கு வராமல் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்!

Last Updated : Nov 25, 2020, 8:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details