தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டவுசர் கொள்ளையர்கள் இருவர் கைது! - police investigation

கோயம்புத்தூர்: சூலூரில் டவுசர் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 10 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

இருவர் கைது
இருவர் கைது

By

Published : Sep 27, 2020, 8:13 AM IST

கோயம்புத்தூர் மாநகரின் முக்கிய இடங்களான சிங்காநல்லூர், பீளமேடு, புறநகர் பகுதியான சூலூர், சிந்தாமணிப்புதூர் பகுதிகளில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு டவுசர் கொள்ளையர்கள் ஊடுருவி தனியாக இருக்கும் வீடுகளிலும், ஆட்கள் உள்ள வீடுகளின் கதவை உடைத்துக்கொண்டும் உள்ளே சென்று தொடர்ச்சியாக கொள்ளையடித்தும் வந்தனர்.

இதனைத்தொடர்ந்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிந்தாமணிப்புதூர் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளை கும்பலை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து டவுசர் கொள்ளையர்களில் நடமாட்டம் குறைந்தது, இந்நிலையில் நேற்று(செப் 26) சூலூர் சந்தைப்பேட்டை பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஒருவரது பெயர் நாகராஜ் என்பதும் இவர் நீலகிரி மாவட்டம் எருமேடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. மேலும் மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த சிவன் என்பதும் தெரியவந்தது . இவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட டவுசர் கொள்ளையர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடித்துவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெரியார் சிலைக்கு காவி சாயம்!

ABOUT THE AUTHOR

...view details