தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லிமலை காப்புக்காட்டில் மான்வேட்டை: வனத்துறை விசாரணை! - nellimali forest deer hunt

கோவை: மேட்டுப்பாளையம் வனசரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை காப்புக்காட்டில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை
கோவை

By

Published : Jan 23, 2021, 1:23 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை காப்பு காடு அருகே குருந்தமலை கோயில் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு மான்கள் சுடப்பட்டு இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

கிடைத்த தகவலின்படி, இன்று(ஜன-23) அதிகாலையில் குருந்தமலை கோயில் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக நெல்லிமலை வன காப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இந்தக் கோயில் நெல்லிமலை காப்புக் காட்டின் தெற்கு எல்லையிலிருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதையடுத்து, சாலையில் வரும் வாகனங்களை வனக்காப்பாளர்கள் சோதனை செய்தனர்.

அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது. வனக்காப்பாளர்கள் விரட்டி செல்வதற்குள், அவர்கள் குறுகிய பாதை வழியாக தப்பிவிட்டனர். இதையடுத்து, வனக்காப்பாளர்கள் திரும்பி செல்கையில், சாக்கு பை ஒன்றை பார்த்தனர். அதற்குள் துப்பாக்கிச் குண்டு காயங்களால் இறந்த இரண்டு மான்கள் இருந்தன. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details