கோயம்புத்தூர்:தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி ஆசிரியரால் ஏற்பட்ட தொடர் பாலியல் தொல்லையால்(Sexual assault), தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பள்ளி ஆசிரியரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மேற்கு மகளிர் காவல் துறையினர் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீதான விசாரணை இன்று (நவ.25) கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இம்மனுவினை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆசிரியரை அழைத்துச் செல்லும் போது, நீதிமன்றத்தில் இருந்த ஒருவர், ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அந்நபரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சபாஷ்.. தாம்பரத்தில் பளபளக்கும் பட்டாக்கத்தி... பதுங்கிய கும்பல், தூக்கிய காவலர்கள்!