தமிழ்நாடு

tamil nadu

காட்டு யானை தாக்கி இரண்டு மாடுகள் படுகாயம்!

By

Published : Apr 16, 2021, 3:24 PM IST

கோவை : அன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் தாக்கி இரண்டு மாடுகள் படுகாயம் அடைந்த நிலையில் யானகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

elements_inside_village_
elements_inside_village_

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியிலிருந்து இரண்டு ஆண் காட்டு யானைகள் நேற்று மாலை வெளியே வந்தன. அந்த யானைகள் இன்று (ஏப்.16) காலை சாலையூர் பகுதி வழியாக மங்காபாளையம் என்ற கிராமத்திற்குள் நுழைந்து கருப்புசாமி என்பவரது தோட்டத்திற்குள் சென்று கட்டப்பட்டிருந்த பசுமாட்டினை தாக்கியதில் மாட்டின் குடல் வெளியே வந்தது.

இதையடுத்து அருகே உள்ள கூலே கவுண்டம்பாளையம் பகுதிக்குள் சென்ற யானைகள் வெங்கிடுசாமி என்பவரின் மாட்டினை தாக்கியதில் மாடு படுகாயமடைந்தது. பின்னர், அப்பகுதி மக்கள் விரட்டியதால் இரண்டு காட்டு யானைகளும் இடுகம்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு ஆஞ்சநேயர் கோயில் கரடு பகுதியில் உள்ள பள்ளத்தில் இரண்டு யானைகளும் முகாமிட்டுள்ளன.

ஊருக்குள் புகுந்த காட்டு யானை

பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் யானைகளை கண்காணித்து வருகின்றனர். பகல் நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் யானைகளை இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

தென் தமிழ்நாடு, மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details