கோயம்புத்தூர்: சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் அப்பகுதியில் ஸ்ரீ சரஸ்வதி கலாலயா என்ற பரதநாட்டிய பள்ளியை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை (டிச.3) பரதநாட்டிய பள்ளியில் இருந்த 2 குத்து விளக்குகள் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், நீண்ட நேரம் குத்து விளக்குகளை தேடிவிட்டு பின்பு வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் வந்து பள்ளியை திறந்து பார்த்தபோது, நடராஜர் சிலை உள்ளிட்ட சுமார் ரூ.50,000 மதிப்பிலான சிலைகள் காணாமல் போயுள்ளன. இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பேலீசார் சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் சிலைகளை திருடிய சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), கிரன் (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் கூடுதல் மதுபானம் வாங்க இருவரும் சிலைகளை திருடியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கார்த்திகை தீபம்: லட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோயில்!