கோவை மாவட்டம் அன்னூர் நல்லிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 6ஆம் தேதி தனது நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்துசென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் சிறுமியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், காட்டிற்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.
சிறுமி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் சிறுமியைக் காப்பாற்றினர். அரவிந்தை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, அவரது நண்பர் காளிதாஸ் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.