பொள்ளாச்சி புதுதிட்ட சாலை சந்திப்பில் மகாலிங்கபுரம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சந்தேகத்துக்கிடமாக வந்த காரை சோதனை செய்தனர். இதில் காருக்குள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த இலவச அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து காரிலிருந்து தப்பி ஓட முயன்ற மாப்பிள்ளை கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த விஜயன், சாதிக் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், பொள்ளாச்சி நந்தனார் காலனி பகுதியில் உள்ள நியாய விலைக் கடையிலிருந்து இந்த விலையில்லா அரசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதாகத் தெரிவித்தனர்.