கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில், அரசாணை 92-ன் படி ஆண்டிற்கு இரண்டு லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அரசாணையை பல கல்லூரிகள் முறையாக அமல்படுத்துவதில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
மனு அளிக்க வந்த மாணவர்கள், காவல்துறையினருக்கிடையே தள்ளுமுள்ளு - collectrate
கோவை: அரசாணை 92 ஐ அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்தக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மனு அளிக்க வந்த மணவர்கள் காவல்துறைடைய தள்ளுமுள்ளு
இந்நிலையில், அரசாணை 92 ஐ அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்தக் கோரி, மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க ஊர்வலமாக வந்த போது, காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மனு அளிக்க வந்த 45 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.