கோவை: திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ராமஜெயம், திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த சிசிடிவி காட்சிகளில், கொலை நடைபெற்ற சிறிது நேரத்தில் அப்பகுதியிலிருந்து மாருதி சுசுகி வெர்சா வாகனம் ஒன்று செல்வது பதிவாகியிருந்தது. இந்த வாகனம் கொலையாளிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக மூன்று சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாருதி சுசுகி வெர்சா வாகனத்தின் உரிமையாளர்களின் பட்டியலை திரட்டி, வாகன உரிமையாளர்களின் வீட்டு முகவரிக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக கோவையில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட மாருதி சுசுகி வெர்சா உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் ஆயிரத்து 400 கார்களின் உரிமையாளர்களிடம் விசாரணைக்கு நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி ஆலோசனை