தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் 2018ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி முறையாக அனுமதி பெறாமல் சென்ற 23 பேர், அந்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த தீ விபத்திற்கு பிறகு, மலையேற்றம் மேற்கொள்ள பல கட்டுப்பாடுகளை வனத்துறை கொண்டுவந்தது.
வனப்பகுதியில் மலையேற்றம்: யானை தாக்கி பெண் உயிரிழப்பு...! - வனப்பகுதியில் பாதுகாப்பாக மலையேற்றம்
கோவை: பாலமலை வனப்பகுதியில் எட்டு பேர் கொண்ட குழுவினர் மலையேற்றம் செய்தபோது யானை தாக்கியதில், தனியார் மருத்துவமனை அலுவலர் புவனேஸ்வரி என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பாலமலை வனப்பகுதியில் எட்டு பேர் கொண்ட குழுவினர் மலையேற்றம் செய்தனர். இதில் ஒற்றை யானை தாக்கியதில் தனியார் மருத்துவமனை அலுவலர் புவனேஸ்வரி உயிரிழந்தார். ஆனாலும் மலையேற்றத்திற்கான மவுசு இன்னும் மக்களிடம் குறையவில்லை. தற்போது மலையேற்றத்திற்காக வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து மலையேற்றம் செய்துவருகின்றனர். அதுமட்டுமின்றி பயிற்சி அளிப்பதற்கும் குழந்தைகளை பெற்றோர் அழைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக மலைவாழ் கூறுகையில், முன்னெப்போதும் இல்லாத அளவு யானைகள் அதிகமாக படையெடுக்கிறது. மலையில் வாழும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.