இந்தப் போராட்டம் குறித்து பேசிய போக்குவரத்து ஊழியர் ஒருவர், "அரசு ஊழியர்கள், அரசு நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு தீபாவளி போனஸ் வழங்கிவிட்டது. ஆனால் விழாகாலங்களில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் போனஸ் வழங்காமல் இந்த அரசு இழுத்தடிக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. அந்த சிறப்பு பேருந்துகளையும் போக்குவரத்து ஊழியர்கள் தான் இயக்கப்போகிறார்கள். இப்படி பண்டிகை காலத்தில் இரவு, பகல் பாராமல் மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து தொழிலாளர்களை அரசு சுத்தமாக கண்டுகொள்வதில்லை.