கோயம்புத்தூர் சாய்பாபா கோயில் பகுதியில் வசித்து வந்த திருநங்கை சங்கீதாவை (55) கொன்ற அடையாளம் தெரியாத நபர்கள், அவரது உடலை டிரம்மில் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சாய்பாபா கோயில் பகுதி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கீதாவின் சகதோழிகளிடம் கேட்கும்போது, சங்கீதா வீட்டில் தனியாக தான் வசித்து வந்ததாகவும், கடந்த சனிக்கிழமையன்று கடைசியாக செல்போனில் தங்களிடம் பேசியதாகவும் தெரிவித்தனர். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளும் சங்கீதாவுக்கு எதிரிகள் என யாரும் இல்லையென்றும் அவருடைய (சங்கீதா) தோழிகள் தெரிவித்தனர்.
திருநங்கை வெட்டிக் கொலை: காவல் துறை விசாரணை இது குறித்து காவல் துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். சில மாதங்களுக்கு முன்னர் தான் சங்கீதா, கோயம்புத்தூர் சிந்தாமணி பகுதியில் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை தொடங்கி திருநங்கைகளுக்கு வேலை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் - கொலை குற்றம் அம்பலம்