கோவையில் சகோதரி அறக்கட்டளை சார்பில் முதல்முறையாக வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வ.ஊ.சி.பூங்கா வரை நடைபெற்ற இப்பபேரணியில் திருநங்கைகள், திருநம்பிகள், ஒரு பால் ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை கல்கி சுப்ரமணியம், " திருநங்கைகள், திருநம்பிகள், ஒரு பால் ஈர்ப்பாளர்கள் அனைவரையும் அவர்களது பெற்றோர்களும் இந்த சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களைப் புறக்கணிக்கும் பெற்றோர்களுக்கு தண்டனைகள் வழங்க வேண்டும். இங்கு திருநங்கைகள் குற்றவாளிகள் அல்ல, அவர்களின் பெற்றோர்கள் தான்" என்றார்.
மேலும் திருநங்கைகளையும் திருநம்பிகளையும் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இப்பேரணியில் பங்கேற்ற பால் புதுமையினர், " எங்கள் பேச்சு எங்கள் உரிமை, எங்கள் இருப்பிடம் எங்கள் உரிமை " என்று கோஷம் எழுப்பினர்.