தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காசி தமிழ் சங்கமம்: கோவையில் இருந்து புறப்பட்டது 8-வது ரயில் - காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான 8-வது ரயில் கோவையில் இருந்து புறப்பட்டது.

கோவையில் இருந்து புறப்பட்டது 8-வது ரயில்
கோவையில் இருந்து புறப்பட்டது 8-வது ரயில்

By

Published : Dec 4, 2022, 9:28 AM IST

கோயம்புத்தூர்: காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம், பண்பாடு, கலாச்சாரத் தொடர்பை வலுப்படுத்தும் வகையில் தொடங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான 8-வது ரயில் சேவை, கோயம்புத்தூரில் இருந்து இன்று (டிச. 4) அதிகாலை 5 மணியளவில் புறப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 98 பயணிகள், கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளனர்.

கோவையில் இருந்து புறப்பட்டது 8-வது ரயில்

இக்குழுவில், மாணவர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர் ஆகியோர் உள்ளனர். கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து கடந்த 20, 27 ஆகிய தேதிகளில் இரண்டு குழு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில், மூன்றாவதாக இன்று அதிகாலை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு குழு புறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை, பாஜகவின் தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் அக்கட்சியினர் வழி அனுப்பி வைத்தனர். ரயில்வே, மாநகர காவல்துறையினர் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பயணித்த நெடுஞ்சாலையில் எஸ்ஐ பணம் வசுல்; போலி போலீஸ் கைது..

ABOUT THE AUTHOR

...view details