தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தையின்மையால் சோகம்: நண்பனின் குழந்தையைக் கடத்திய தம்பதி!

கோவை: அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையைக் கடத்திய தம்பதியினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

குழந்தையின்மையால் ஏற்பட்ட சோகம்
குழந்தையின்மையால் ஏற்பட்ட சோகம்

By

Published : Jun 14, 2020, 8:51 PM IST

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த தம்பதி செல்வம், செல்வராணி. இவர்கள் தற்போது திருப்பூரில் சாலையோரம் அமர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதேபோல் திருப்பூர் மாவட்டம் விக்னேஷ், பிரபாவதி தம்பதியினரும் சாலையோரம் அமர்ந்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். செல்வம் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு வியாபார ரீதியாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

செல்வம் தம்பதியினருக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. விக்னேஷ் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு செல்வம் தம்பதியினர் அவர்கள் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்க வந்துள்ளார். அவர்களுக்கு உதவியாக விக்னேஷ் தம்பதியினரும் வந்துள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தை
இந்நிலையில் செல்வம் அவரது ஆதார் அட்டையை நகல் எடுப்பதற்காகச் சென்றுள்ளார். செல்வத்தின் மனைவி செல்வராணி ஒரு குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார். மற்றொரு குழந்தையைப் பிரபாவதி வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து செல்வராணி, தன் மற்றொரு குழந்தையையும் பிரபாவதியையும் தேடியபோது பிரபாவதியும், குழந்தையும் அங்கு இல்லை. மேலும் அங்கிருந்த விக்னேஷையும் காணவில்லை.

இதுகுறித்து செல்வம் தம்பதியினர் காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் திருப்பூரில் விக்னேஷ், பிரபாவதியை காணாமல்போன குழந்தையுடன் பிடித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் நீண்ட காலங்களாக, குழந்தை இல்லாமல் தவித்து வருவதால், குழந்தையை எடுத்துச் சென்றதாகவும், திருப்பூரிலிருந்து வேறு ஊருக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த நிலையில் பிடிபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் விக்னேஷிடமிருந்து பத்திரமாக, அந்த ஆண் குழந்தை மீட்கப்பட்டு செல்வம் தம்பதியினரிடம் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தல் - 7 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details