கோவை மாவட்டம், வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்(50). கட்டட மேஸ்திரியான இவர் அதே பகுதியில் உள்ள குரங்குமுடி எஸ்டேட்டிற்கு தண்ணீர் கொண்டு சென்ற டிராக்டர் டேங்கரில் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த மரக்கிளை தன் மீது மோதப்போகிறது என பயந்து டிராக்டரில் இருந்து குதித்துள்ளார்.
வால்பாறையில் டிராக்டர் மோதி கட்டட மேஸ்திரி உயிரிழப்பு - கட்டட மேஸ்திரி பலி
கோவை: வால்பாறையில் கட்டட மேஸ்திரி மீது டிராக்டர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
construction master
ஆனால் இதை கவனிக்காத டிரைவர் டிராக்டரை தொடர்ந்து இயக்கியதால் சக்கரம் ஏறி இறங்கி மேஸ்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.