டெல்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் - பெரியார் சிலை
கோவை: மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத் திருத்தத்தை கண்டித்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர், கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடி உயிரிழந்த 30 விவசாயிகளுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வீரவணக்கம் செலுத்தினர்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். இனிமேலாவது மத்திய அரசு இந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கூறினர்.