தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனத்துறையின் தடுப்புகளை மீறிய சுற்றுலாப் பயணிகள் - சுற்றுலாப் பயணிகள்

வால்பாறை செல்லும் வழியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடைத்த சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்புகள் உடைப்பு
தடுப்புகள் உடைப்பு

By

Published : Jul 25, 2021, 2:47 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வால்பாறைக்கு வருவது வழக்கம். வால்பாறை செல்லும் வழியிலுள்ள 9ஆவது கொண்டை ஊசி வளைவின் முனையில், ஆழியாறு அணையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் ஓர் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

வால்பாறை செல்லும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் அந்த இடத்தில் நின்று அணை, மலைகளை கண்டு ரசித்துவிட்டுச் செல்வார்கள். இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக அந்த இடத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

வனத்துறைக்கு கோரிக்கை

மேலும், பாதுகாப்பு தடுப்பு கம்பிகளை வனத்துறையினர் பூட்டி வைத்தனர். ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக சுற்றுலா வரும் பயணிகள், வனத்துறையினரால் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளை உடைத்துக்கொண்டு, அந்தத் தடை செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று வருகின்றனர்.

தடுப்புகள் உடைப்பு

இது குறித்து வனத்துறையினர், விரைவில் நடவடிக்கை எடுத்து, சுற்றுலாப் பயணிகள் செல்லாதவாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 25 கிலோ கடல் அட்டைகளை வைத்திருந்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details