தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Kovai Kutralam:கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - Coimbatore Falls News Today

Kovai Kutralam:காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றால அருவியில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

pongal:கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்
pongal:கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்

By

Published : Jan 17, 2023, 7:13 PM IST

Updated : Jan 17, 2023, 8:01 PM IST

Kovai Kutralam:கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்

Kovai Kutralam:கோவை:காணும் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் வீட்டில் சமைத்து எடுத்துச் சென்ற உணவுப் பொருட்களைப் பகிர்ந்து உண்டு காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

அதன் ஒரு பகுதியாக காணும் பொங்கலை முன்னிட்டு, கோவை குற்றால நீர்வீழ்ச்சிக்கு செல்ல காலை, 9:00 மணி முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமதிச் சீட்டை பெற்றுக்கொண்டு அருவிக்கு சென்றனர்.

பின்னர் நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், அவர்கள் எடுத்து வந்திருந்த உணவை கூட்டாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். இதனால், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, முகப்பு பகுதிகள் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

சிலர் நீர் வீழ்ச்சியில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் வனத்துறை ஊழியர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ’கோவை குற்றால அருவிக்கு தீபாவளி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்’ என்றனர்.

pongal:கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்

குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி நீண்ட விடுமுறை வருவதால் அந்த சமயங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள். இவ்வாண்டு 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்ததாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை

Last Updated : Jan 17, 2023, 8:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details