தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள், யானை சவாரி இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் வனத்துறைக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

By

Published : Oct 4, 2022, 10:51 PM IST

பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகம் 956 ச.கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இது தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களில் மிகவும் பிரபலமானதாகும். இங்கு 28 யானைகளை வனத்துறையினர் பரமரித்து வருகின்றனர்.

ஆயுதபூஜையை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களிருந்து சுற்றுலா பயணிகள் ஆனைமலையில் குவித்தனர். யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானை கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா (எ) முத்து சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இருக்கின்றன.

மேலும் டாப்பிலிப்பில் பறவைகளில் குரல் கேட்கும் இயந்திரம் மற்றும் விலங்குகளின் உருவங்கள் வாழ்வியல் குறித்த கண்காட்சியும் உள்ளது, கடந்த கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக யானை சவாரி, காட்டு பகுதிகளில் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வனவிலங்குகளை காண்பிப்பது ஆகியவை நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு தமிழ்நாடு அரசின் நெறிமுறைகள்படி சுற்றுபயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது யானை வளர்ப்பு முகாமுக்கு மட்டும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றனர். பழைய முறைபடி யானை சவாரியும், காட்டு பகுதிக்கு அழைத்து சென்று வனவிலங்குகளை காண்பித்தால் டாப்சிலிப் பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது யானை சவாரி இல்லாதது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இதனால் வனத்துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பயணிகள் நலன் கருதி நல்ல முடிவை தமிழ்நாடு அரசும், வனத்துறை அமைச்சர் ராமசந்திரனும் எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இதையும் படிங்க:கோவையில் மேலும் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்: பொள்ளாச்சி போலீசாருக்கு எச்சரிக்கை கடிதம்

ABOUT THE AUTHOR

...view details