கோயம்புத்தூர்:ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச் சரகத்திற்கு உட்பட்ட கவியருவி, தமிழ்நாடு - கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கவியருவியில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.
கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இருந்தபோதிலும், வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். அறிவியல் குளிக்கும்போது தடுப்பு கம்பிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் குளிக்கின்றனர்.