மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது.
குரங்கு அருவியில் 5ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை! - குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
கோவை: வால்பாறை குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஐந்தாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணைகளான சோலையார் அணை ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல் 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணை தற்போது 62 புள்ளி 60 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும், ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.9 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் இன்னும் ஓரிரு தினங்களில் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தாவது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.