கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வனத்துறையினர் நேற்றிலிருந்து அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து ஆழியார் அணை, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் வால்பாறை செல்லும் சாலையில் உள்ள குரங்கு அருவிக்கு வருகை தருகின்றனர்.
குரங்கு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதி! - pollachi
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவிக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகியுள்ளது.
touristors
வனத்துறையினர் ரூ. 30 கட்டணம் பெற்று சுற்றுலாப் பயணிகளை அருவிக்கு அனுமதிக்கின்றனர். தமிழ்நாடு, கேரள மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.