தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்பு கம்பிகளை  சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை - பொள்ளாச்சி ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்

கோவை: பொள்ளாச்சி ஆழியாறு அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்பு கம்பிகளை சீரமைக்ககோரி  சுற்றுலாப் பயணிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

monkey falls

By

Published : Nov 18, 2019, 3:45 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அருகே உள்ள குரங்கு அருவிக்கு நாள்தோறும் பல மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில தினங்களாக ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதியான வால்பாறை, சோலையாறு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.இதனால் ஆழியாறுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பு கம்பிகளை அமைக்க கோரிக்கை

இந்நிலையில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பொழிவு குறைந்து குரங்கு அருவியில் குறைந்தளவு தண்ணீர் விழுவதால் நேற்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நீர்வீழ்ச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தடுப்பு கம்பிகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தடுப்பு கம்பிகள் அமைக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் நீர்வீழ்ச்சி உள்ளது. எனவே விரைந்து தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: மினி லாரி மோதி சிறுவன் உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details