தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2020, 11:42 AM IST

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 மணி செய்திச் சுருக்கம்
11 மணி செய்திச் சுருக்கம்

'போர் தீர்வாகாது, பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்'- ஃபரூக் அப்துல்லா!

ஸ்ரீநகர்: இந்தியா- சீனா இடையே போர் தீர்வாகாது, ராணுவ பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா- சீனா எல்லை அருகே சாலையமைக்கும் பணிகள் தீவிரம்!

பித்தோராகார்க்: உத்தரகாண்ட் ஜோகர் பள்ளத்தாக்கு, முன்சியாரி- புக்தியார்- மிலம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம்!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

'ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல் தலைவர்' - பாஜக

டெல்லி: ராகுல் காந்தி மிகவும் பொறுப்பற்ற அரசியல் தலைவர் என்று பாஜக விமர்சித்துள்ளது.

சீனாவுக்கு ரயில்வே ஒப்பந்தங்கள்; - பிரியங்கா காந்தி காட்டம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சீனாவைப் புறக்கணிக்க பலவீனமான அணுகல்களை மேற்கொண்டதற்காக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் 31 ஆயிரத்து 736 தெருக்களில் கரோனா பாதிப்பு இல்லை!

சென்னையில் 31 ஆயிரத்து 736 தெருக்கள் கரோனா பாதிப்பு இல்லாத தெருக்களாக உள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவப் பணியாளர் நியமனத்தில் முறைகேடு - நீதிமன்ற விசாரணை கோரும் டிடிவி தினகரன்

சென்னை : தற்காலிக மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் நடந்துவரும் குளறுபடிகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

'தமிழ்நாட்டில் மேலும் 10 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி'

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 10 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

'வேலையில் திருப்தி இல்லை' - சீனாவைக் கழற்றி விட்ட இந்திய ரயில்வே!

டெல்லி: சீனாவுக்கு வழங்கப்பட்ட ரயில்வே பணிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

ஐஓஎஸ் பயனர்கள் தங்கள் ட்விட்டர் செயலி மூலம் இனி குரல் பதிவிடலாம்!

சான் ஃபிரான்சிஸ்கோ: மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் புதன்கிழமையன்று அமெரிக்காவில் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு ஆடியோவை ட்வீட்டாக பதிவுசெய்வதற்கான சோதனையை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details