தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த வளாகத்திற்குள் நுழைந்த கழிவறை வாகனம்! - வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த வளாகத்திற்குள் நுழைந்த கழிவறை வாகனம்
கோயம்புத்தூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த வளாகத்திற்குள் மொபைல் கழிவறை வாகனம் நுழைந்தையடுத்து அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட வாக்கு இயந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்தந்த கட்சிகளுக்காக பூத் மெம்பர்கள் மூன்று பேர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு (ஏப்ரல்.13) அக்கல்லூரி வளாகத்திற்குள் காவல் துறையினரின் மொபைல் கழிவறை வாகனம் நுழைந்தது. இது அங்கிருந்த கட்சிகாரர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இது குறித்து அவர்கள் தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலின்பேரில் அங்கு வந்த சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் கார்த்திக், தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உள்பட சில வேட்பாளர்கள், அந்த வாகனத்தை சோதனையிடுமாறு காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அந்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் எந்தவித இயந்திரங்களும் இல்லாததைத் தொடர்ந்து, வாகனத்தை அங்கிருந்து எடுத்துசெல்லுமாறு வாகன ஓட்டுநரிடம் காவல் துறையினர் கூறினர். இதனால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.