கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாள்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இச்சூழலில் இன்று சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. இந்த மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை வருவாய் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 88 டாஸ்மாக் கடைகள் தவிர்த்து, மற்ற பகுதிகளிலுள்ள 207 கடைகள் இன்று திறக்கப்பட்டன. காலை 9 மணி முதலே மதுக்கடைகளின் முன்பாக ஏராளமானோர் குவிந்தனர். கடைகள் திறந்த பின் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.