தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவாணி அணை தண்ணீர் வெளியேற்றும் விவகாரம்: கேரள அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை

கோவை: சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் விவகாரம் தொடர்பாக கேரள அரசுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

By

Published : Sep 24, 2020, 3:59 PM IST

சிறுவாணி அணை
சிறுவாணி அணை

கோவை நகரின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கேரள வனப்பகுதியில் அணை அமைந்துள்ளதால் கேரள மாநில நீர் பாசனத் துறையினர் அணையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சிறுவாணி அணையில் 49.50 அடி உயரத்துக்கு நீரைத் தேக்க முடியும், அணை நிரம்பும்போது பாதுகாப்பு கருதி 45 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவருகின்றனர். தற்போது பருவமழை பெய்துவருவதால் சிறுவாணி அணையில், கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. இதனால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44.61 அடியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து கேரள நீர்ப்பாசனத் துறை அலுவலர்கள், சிறுவாணி அணையிலிருந்து, தங்களது பகுதியை நோக்கியுள்ள மதகு வழியாகத் தண்ணீரை திறந்துவிட்டுவருகின்றனர். இதனால் சிறுவாணி அணையில் குறிப்பிட்ட அடிக்கு நீர் மட்டம் சரிந்தது.

இது குறித்து தகவலறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கேரளா அரசிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கூறுகையில்,

“தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கோவையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள், நேற்று கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்துக்குச் சென்று அங்குள்ள நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளரைச் சந்தித்து, சிறுவாணி அணையில் 49.50 அடி வரைக்கும் தண்ணீரைத் தேக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் கூடுதலாக 1.20 மீட்டர் அளவுக்காவது தண்ணீரைத் தேக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க...போலி ஆவணங்கள் வைத்து கடன் வழங்கிய வங்கி மேலாளருக்கு 2 ஆண்டு சிறை!

ABOUT THE AUTHOR

...view details