தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை மண்ணின் குடிநீர் தேவையை அரசு பூர்த்தி செய்யவேண்டும் - சீமான் கோரிக்கை - TN government must meet KL government

கோவை: தமிழ்நாடு அரசு உடனடியாக கேரள அரசுடன் பேசி கோவை மண்ணின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான் கோரிக்கை
சீமான் கோரிக்கை

By

Published : May 30, 2020, 4:33 PM IST

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையிலிருந்து கோவைக்கு வரக்கூடிய பழைய குடிநீர் குழாயை கேரள மாநில நீர் வளத்துறையினர் அடைத்து வருகின்றனர்.

இதுகுறித்த செய்தி வெளியான நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுகவினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியரை நாம் தமிழர் கட்சியினர் சந்தித்து பழைய குடிநீர் குழாயை அடைக்கும் பணியை நிறுத்த தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "காலம் காலமாக சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் வரக்கூடிய பழைய குடிநீர் குழாயை கேரள அரசு அடைப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு உடனடியாக கேரள அரசுடன் பேசி கோவை மண்ணின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மராட்டியத்தில் சிக்கியுள்ள தமிழர்களை ஊருக்கு அனுப்புங்கள்' - சீமான்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details