தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூரில் இரண்டு நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக நேற்று (ஜனவரி 22) விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த அவர் தனியார் கல்லூரி வளகாத்தில் உள்ள அரங்கில் அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் மனுக்கள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.
பின்னர் தொழில் முனைவோர் மத்தியில் பேசிய முதலமைச்சர், தொழில்துறையினர் முன் வைத்துள்ள கோரிக்கைகளில் எங்களால் என்னென்ன முடியுமோ அத்தனையும் செய்து கொடுக்கப்படும். தொழிலும் வேளாண்மையும் ஒரு நாட்டிற்கு இரு கண்கள். இதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகின்றது. டெல்டா பகுதியில் வழக்கமாக 23 லட்சம் மெட்ரிக் உற்பத்தி இருக்கும், இந்த ஆண்டு 32 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தியாகி இருக்கின்றது.