கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி. இவர், தனது ஸ்கோடா காரில் தொழில் தொடர்பாக பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலைப்பேட்டைக்கு இன்று காலை வந்தார். பின்னர் அங்கிருந்து கோவை செல்வதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள கிழக்கு புறவழிச்சாலை வழியாக வந்தார். அப்போது குள்ளக்கபாளையம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள நார் தொழிற்சாலைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும்போது சாலையில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சாலையில் நின்றுகொண்டிருந்த சொகுசு காரில் திடீர் தீ - பொள்ளாச்சி
கோவை: பொள்ளாச்சி அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நின்று கொண்டிருந்த சொகுசு காரில் திடீர் தீ!!!!
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடம் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தில் காரின் உள்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.