கோவை மாவட்டம் போளுவாம்பட்டியில் கடந்த 4ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்பின்போது அப்பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற சென்ற சகோதரர் மணிகண்டனும் நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மணிகண்டன், ராம்குமாரின் உடல்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது மாயமான இரு இளைஞர்களில் ஒருவர் மீட்பு!!
கோவை : நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ராம்குமாரின் உடல் மூன்று நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு துறையினரால் சித்திரைச்சாவடி அணை அருகே மீட்கப்பட்டுள்ளது.
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/07-September-2019/4367138_30_4367138_1567854670039.png
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு இன்று ராம்குமாரின் உடலை சித்திரைச்சாவடி அணை அருகே தீயணைப்பு துறையினர் கண்டெடுத்தனர். அதேபோல் ராம்குமாரின் சகோதரர் மணிகண்டனும் மாயமானதை அடுத்து, அவரும் நீருக்குள் மூழ்கி இருப்பாரா என்ற சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் தேடிவருகின்றனர்.