தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை அருகே உணவகத்திற்குள் நுழைந்த காட்டுயானை - தண்ணீர் தேடி

கோவை: தடாகம் பகுதியில் காட்டு யானை ஒன்று உணவகத்தில் நுழைந்து உணவு தேடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

உணவகத்திற்குள் நுழைந்த காட்டுயானை -அட்டகாசம்!

By

Published : Jul 10, 2019, 3:11 PM IST

கோவை தடாகம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் காட்டு யானை ஒன்று உலா வந்தது. அந்த பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் இருந்த ஊழியர், குப்பைகளை கொட்ட வெளியே சென்றார். அப்போது, அவ்வழியே சென்ற காட்டுயானை ஊழியரை கண்டதும் திடீரென அவரை பின் தொடங்கியது. காட்டுயானை வருவதை பார்த்த அதிர்ச்சியில் அங்கிருந்து உணவகத்திற்குள் ஓடி நுழைந்தார் அந்த ஊழியர்.

உணவகத்திற்குள் நுழைந்த காட்டுயானை -அட்டகாசம்!

அதன்பின், உணவகத்திற்குள் புகுந்த யானை, உணவைத் தேடி தனது தும்பிக்கையால் அங்கிருந்த பொருட்களை தள்ளிவிட்டு காலால் உதைத்து. ஆனால் உணவு கிடைக்காத நிலையில், அங்கிருந்து வெளியே சென்றது. இந்த காட்சிகள் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது

கோவை தடாகம், ஆனைகட்டி, மாங்கரை உள்ளிட்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது தற்போது வாடிக்கையாகிவிட்டன. தண்ணீர்ப்பஞ்சம், உணவின்மை தனக்கான ஒரு இடம், இவையாவும் மனிதர்களுக்கு மட்டுமல்ல என்பதை இந்நிகழ்வு அறிவுறுத்துகிறது.

ABOUT THE AUTHOR

...view details