தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை வந்தடைந்த கமல்! - மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்

கோவை: மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஐந்தாம் கட்ட தேர்தல் பரப்புரைக்காக கோயம்புத்தூர் வந்தடைந்தார்.

மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன்
மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன்

By

Published : Jan 10, 2021, 5:57 PM IST

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஐந்தாம் கட்ட தேர்தல் பரப்புரைக்காக கோயம்புத்தூர் வந்தடைந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பயணத்திற்காக போடப்பட்ட கொடிகள் அகற்றப்பட்டது கூடுதல் விளம்பரத்தை அளித்துள்ளது. அதற்காக அமைச்சர்களுக்கும், உடனிருந்த மாநகராட்சி அலுவலர்களுக்கு நன்றிகள். இந்த ஆர்வத்தை பொது மக்கள் பணியிலும் காட்டினால் நாங்கள் அரசியலுக்கே வந்திருக்க மாட்டோம் என்றார்.

இந்நிலையில் அவரை வரவேற்க திரண்ட 1000-க்கும் மேற்பட்டவர்கள் அவர் மீது பூக்களை வீசியதால் விமான நிலையம் அரசியல் பொதுக் கூட்ட இடம் போல் காட்சியளித்தது. அதன் பின்னர் அதனை விமான நிலைய பணியாளர்கள் தூய்மைப்படுத்தினர். இந்நிகழ்வில் அவரை காண வந்த ரசிகர்கள் எடுத்து வந்த பதாகைகள் கமல் சென்ற பின் குப்பை தொட்டியில் கிடந்தன.

இதையும் படிங்க...வா தலைவா! வா - ரஜினியின் அரசியல் வருகைக்காக ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details