தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எரிபொருள்கள் விலை உயர்வு - சிலிண்டரை பாடையில் கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்! - பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து

கோயம்புத்தூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனித நேய தொழிற்சங்கத்தினர் சிலிண்டரை பாடையில் கட்டி தூக்கிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

_tmmk_protest
_tmmk_protest

By

Published : Feb 24, 2021, 7:03 AM IST

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் நேற்று (பிப்.23) மனித நேய தொழிற்சங்கத்தினர் செஞ்சிலுவை சங்கம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை கயிறு கட்டி ஊர்வலமாக இழுத்து வந்தனர். மேலும் எரிவாயு சிலிண்டருக்கு பாடை கட்டி ஊர்வலமாக தூக்கியபடியும் வந்த அவர்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

மனித நேய தொழிற்சங்கத்தினர் போராட்டம்

பின்னர் எரிவாயு சிலிண்டர் இருந்த பாடையை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தரையில் வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஒப்பாரி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details